
Meyyaram
"கப்பலோட்டிய தமிழன்" வ உ சிதம்பரம்பிள்ளை அவர்கள் ஒரு பன்முகர் என்பதைப் பலரும் அறிவதில்லை. சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்று செக்கிழுத்த செம்மல் சீரியதொரு தொழிற்சங்கவாதி. கவிஞர். இலக்கியத் திறனாய்வாளர். அவருடைய கவிதை நூல்களை ஒலி நூலாக்கம் செய்தது ரமணியின் பாக்கியம்.
நூல்கள்
வ.உ.சி. இயற்றிய நான்கு நூல்களுமே கவிதைகளால் ஆனவைதான். அவை 1.மெய்யறம் 2.மெய்யறிவு 3.பாடல் திரட்டு 4.சுயசரிதை
மெய்யறம்-1914
மெய்யறம் 125 அதிகாரங்களை உடையது. ஒவ்வொரு அதிகாரமும் 10 பாடல்களைக் கொண்டது. ஒரு பாடல் என்பது ஒரு வரி மட்டுமே உடையது. மெய்யறம் 5 பகுதிகளை உடையது. முதல் பகுதி மாணவர்களுக்கானது. அதில் 30 அதிகாரங்கள் உள்ளன. இரண்டாவது பகுதி இல்லறத்தார்களுக்கானது. அதுவும் 30 அதிகாரங்கள் உடையது. மூன்றாவது பகுதியில் ஓர் அரசன் எவ்வாறு இருக்க வேண்டும் என்று 50 அதிகாரங்களில் வ.உ.சி. விளக்குகிறார். நான்காவது பகுதி 10 அதிகாரங்களுடன் நன்னெறி குறித்து விளக்குகிறது. கடைசிப் பகுதியில் உண்மையை அடைவது எப்படி என்று 5 அதிகாரங்களில் வ.உ.சி. விளக்குகிறார்.
Praise
