சுரதா (Suratha; 23 நவம்பர் 1921 – 29 சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.
வளமான சொற்சுவை குன்றாத அழகு, இயற்கைக்கு ஏற்ற ஆனால் புரட்சிகரமான கருத்துக்கள், இன்பந்தரும் காதற்சித்திரங்கள், புதிய புதிய உவமைகள் இவை சாவின் முத்தம் என்ற இந்தக் கவிதைதொகுப்பில் காணக் கிடக்கின்றன.
Release:
2023-04-29
Runtime:
0h 46m
Format:
audio
Weight:
0.0 lb
Language:
English
ISBN:
9798368981963
Publisher:
Findaway World, LLC
Praise

