சுரதா (Suratha; 23 நவம்பர் 1921 – 29 சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.
பாரதியாருக்குப் பின் அவருடைய வாரிசாகத் தம்மைப் பறைசாற்றிக் கொள்ள முன் வந்தவர் பாரதிதாசன் ஒருவர் மட்டுமே என்று சொல்வது சரியாக இருக்கும். ஆனால் பாரதிதாசனுக்கு அவர் காட்டிய மரபில் அவர் கொள்கை வழி நின்று பாடல் இயற்றக் கூடியவர்கள் ஏராளமாக ஆங்காங்கு தோன்றியிருக்கிறார்கள். அவர்களுடைய பாடல்கள் பொன்னி இதழில் அதன் ஆசிரியர் முருகு சுப்பிரமணியம் அவர்களால் ஏழாண்டுக் காலம் தொடர்ந்து வெளியிடப்பட்டன. அப்படி வெளிவந்த 47 கவிஞர்களின் பாடல்களை சுரதா தொகுத்து பாரதிதாசன் பரம்பரை என்ற இந்த நூலில் வெளியிட்டிடுக்கிறார்.
Praise

