
வங்கச் சிறுகதைகள் - Stories from Bengal Vol 1
வங்கச் சிறுகதைகள் Vol 1
தமிழாக்கம் சு கிருஷ்ணமூர்த்தி
1. இறுதி வார்த்தை : தாராசங்கர் பந்த்யோபாத்தியாய்
2. ஓட்டர் சாவித்திரி பாலா: பனஃபூல்
3. சாரங்க் : அசிந்த்ய குமார் சென் குப்தா
4. ராணி பசந்த்: அன்னதா சங்கர் ராய்
5. காணாமற்போனவன்: பிரமேந்திர மித்ரா
6. சரிவு : சதிநாத் பாதுரி
7. எல்லைக்கோட்டின் எல்லை: ஆஷாபூர்ணாதேவி
8. மோசக்காரி: சுபாத்கோஷ்
9. ஒரு காதல் கதை: நரேந்திர நாத் மித்ரா
10. மதிப்புக்குரிய விடைத்தாள் திருத்துபவர் அவர்களுக்கு; நாராயண் கங்கோபாத்தியாய்
முன்னுரை ( ஆசிரியர் குறிப்பிலிருந்து ஒரு சில வரிகள் ) excerpts
நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தார் இந்திய வாசகர்களுக்காக, இந்திய அரசியல் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்திய மொழிகளில் சிறுகதைத் தொகுப்புகள் வெளியிடவும் மற்ற இந்திய மொழிகளில் அவற்றின் மொழி பெயர்ப்புகளைப் பிரசுரிக்கவும் "ஆதான்-பிரதான்" என்ற பெயரில் ஒரு திட்டம் வகுத்தனர். அந்தத் திட்டத்திற்கேற்பத் தயாரிக்கப்பட்டது இந்தச் சிறுகதைத் தொகுப்பு. நமக்கு அறிமுகமான காலத்தைச் சேர்ந்த மனிதர்கள், சமூகம் இவற்றின் சித்திரம் இந்தத் தொகுப்பில் கிடைக்கும்.
ரவீந்திரரின் காலத்தில் த்ரிலோக்யநாத் முகோபாத்தியாய், பிரபாத் குமார் முகோபாத்தியாய், சரத் சந்திர சட்டோபாத்தியாய், பிரமத சௌதுரி முதலியோர் வங்கச் சிறுகதைக்கு வளம் சேர்த்தனர்.
இந்தத் தொகுப்பில் நமக்குப் பரிச்சயமான காலத்தைச் சேர்ந்த சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன. ரவீந்திரரும் சரத் சந்திரரும் நமக்கு அறிமுகமான காலத்தைச் சேர்ந்தவர்களல்லர். இவர்களுக்குப் பிற்பட்ட காலத்தில், கடந்த நாற்பதாண்டுகளில
Praise
