
பாஞ்சாலி சபதம்
மகாபாரதக்கதையைப் பெண்ணுரிமைக் காப்பியமாகத் தமிழில் சுப்பிரமணிய பாரதி வடித்துத் தந்ததே பாஞ்சாலி சபதம். இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பாரதப் போராகவும், பாஞ்சாலியைப் பாரதத் தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்பு இது. இலக்கிய நயமும், கவிநயமும் கொண்டுள்ளது. பாஞ்சாலி சபதம் இரு பாகங்கள் கொண்டது. இந்நூலில் சூழ்ச்சிசருக்கம், சூதாட்டச்சருக்கம், அடிமைச்சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச்சருக்கம் என ஐந்து சருக்கங்களில் நானூற்றுப் பன்னிரண்டு பாடல்கள் உள்ளன. இந்நூல் எளிய தமிழ்நடையினைக் கொண்டது. "எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினை உடைய காவியம் ஒன்று தற்காலத்தில் செய்து தருவோன் நமது தாய்மொழிக்கு உயிர் தருவோன் ஆகின்றான்” – பாரதி எழுதிய முகவுரைப்பகுதி. பாரதிக் கூறும் உவமைகள் சொற் சுருக்கம் உடையவை என்றாலும் செறிந்த கருத்துடையவை. ‘உணர்ச்சி பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் மிகுந்துள்ளது. பாஞ்சாலி சபதத்தில் புலம்பலுக்கு ‘நெட்டோசையும் பகடை உருட்டுதற்கு உருளும் ஓசையும் அமைத்துக் காட்டியுள்ளார் பாரதியார். பாஞ்சாலியின் கதையைச் சித்தரிக்கும் பாஞ்சாலி சபதம் விடுதலை உணர்வையே தன் உயிரோட்டமாகக் கொண்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில் இக்கதை எழுதப்பட்டதால் அகத்தே இருள் உடையவனாகிய துரியோதனன் ஆங்கிலேயரின் உருவாகவும் தருமன் பாரதத்தை ஆண்ட பண்டைய மன்னனாகவும், மாயச் சகுனி மாயச்சூதால் பொன்னையும் மணியையும் ஆட்டையும் மாட்டையும் நாட்டையும் கவர்ந்து கொள்வதால் வாணிகம் என்ற பெயரோடு வந்து புகுந்த ஆங்கிலேயர் நாட்டையே அடிப்படுத்தி நாட்டு மக்களையும் தமது வலையில் விழச் செய்வதைக் குறிப்பதாகவும் ‘மண்டபம் ந
Praise
