
ஞானப்பாடல்கள்
ரமணி ஒலி நூலகத்துக்காக பாரதியாரின் ஞானப்பாடல்கள் 25 இந்த நூலில் அமைந்துள்ளன. இவற்றை வேதாந்தப் பாடல்கள் என்றும் தெய்வப் பாடல்கள் என்றும் சொல்வதுண்டு. இசைப் பாடல் அமைப்பிலன்றி யாப்பு மற்றும் விருத்த ஓசையில் ரமணி இந்த 25 பாடல்களையும் தந்திருக்கிறார்.
பாரதி தனது ஞானப் பாடல்கள் வழி ஞானத்தேடலை ஆனந்தத்தை, கண்டடைதலை வெற்றி முழக்கம், அஞ்ச வேண்டியதில்லை, விடுதலையைப் பேசுதல். மனதில் உறுதி வேண்டும், மாயையைப் பழித்தல், அறிவின் சிறப்பு, பொய்யோ? மெய்யோ?, பக்திச் சிறப்பு என்பதான உட்தலைப்புகளின் வழி ஆராய்கிறது. ஞான நிலையானது உண்மை அறிவை, பேரறிவை கண்டடைதல். இவ் உண்மை அறிவு உள்ளொளியைக் கண்டடைதலுமாகும். இதன் மூலமாக வாழ்வில் எல்லையற்ற பேரானந்த நிலையை மனிதன் எய்திட முடியும். பாரதியின் இந்த ஞானப்பாடல்கள் அனைத்தும் மெய்ப்பொருளை கண்டடைவதன் மூலம் தம் அகமனதை முழுமையான மகிழ்ச்சிக்குரியதாக வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை எடுத்தியம்புகின்றன. மேலும் ஞானத்தை ஞானிகளுக்கு உரிய ஒன்றாக அல்லது சாதாரண மனிதர்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக தத்துவவாதிகள் விளக்கிக் கொண்டிருக்க, பாரதி அறிவின்வழி பயணித்து எல்லோரும் எளிதாக கண்டடையக் கூடியதாக, ஆனந்தப்படக் கூடிய ஒன்றாக ஞானப்பாடல்களை அமைத்துள்ளார்.
Praise
