
கலிங்கராணி
அண்ணாதுரை சமூக நீதி, மாநில உரிமை, மொழி உரிமை தொடர்பான சிந்தனையாளர். அந்த சிந்தனையை வெற்றிகரமாக அரசியல்படுத்தியவர். அப்படி அரசியல் படுத்துவதற்காக மேடை, பத்திரிகை, நாடகம், சினிமா, நூல்கள் என்று எல்லா ஊடகங்களையும், கையில் எடுத்து அதற்குப் புதிய தோற்றமும், உள்ளடக்கமும் தந்தவர். இந்த ஊடகங்களில் பிற திராவிட இயக்கப் படைப்பாளிகளும் அணி அணியாக நுழைந்து தனித்துவமான ஒரு பாரம்பரியம் உருவாக காரணமாக இருந்தவர். . நவீன தமிழின் மீது, மக்கள் புழங்கும் தமிழின் மீது அண்ணா செலுத்தியிருக்கும் தாக்கம் அளப்பரியது. எல்லாவற்றுக்கும் மேலாக உலகில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஒரு நிலப்பரப்புக்கு அதன் முகவரியாக விளங்கும் 'தமிழ்நாடு' என்ற பெயரை சூட்டியவர் அண்ணா. தங்களை ஒரு தனித்த தேசிய இனமாக உணரத் தொடங்கிய தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு அசைக்கமுடியாத ஓர் அங்கீகாரமாகிவிட்டது இந்தப் பெயர். அண்ணா என்ற பெயர் ஒரு பண்பாட்டின் குறியீடாகிவிட்டது. அது ஒரு வரலாறாக, அடையாளமாக கொண்டாடப்படுகிறது. "கலிங்கராணி" அண்ணாவின் இரண்டாம் நாவல். 1943ல் திராவிட நாடு இதழில் வெளிவந்தது. ஆரியர் திராவிடர் கலப்பு எந்த ஒரு போரோ, பேரழிவோ இல்லாமல் நடந்தது எப்போதுமே வரலாற்றில் பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. அந்த கேள்விகளுக்கு கலிங்கராணி சில விடைகளை கோடிட்டு காட்டுகிறது. சோழப் பேரரசரான குலோத்துங்கனின் கலிங்கப் படையெடுப்பை பின்னணியாகக் கொண்டு புனையப்பட்ட இந்த நவீனத்தில், குலோத்துங்கச் சோழரை தவிர மற்ற அனைவருமே கற்பனைப் பாத்திரங்கள் தான். சோழ நாட்டு படைவீரனான வீரமணி, மன்னன் மகளான அம்மங்கையின் தோழி நடனராணி, நடனராணியை பழிதீர்க்க துடிக்கும் மற்றோர் சேடியான ஆரியப் பெண் கங்கா ப
Praise
