அப்பச்சிமார் காவியம்

அப்பச்சிமார் காவியம்


Unabridged

Sale price $2.50 Regular price$4.99
Save 50.0%
Quantity:
window.theme = window.theme || {}; window.theme.preorder_products_on_page = window.theme.preorder_products_on_page || [];

அப்பச்சிமார் காவியம் குருகுல வாளரச மணவாளர் என்று சிறப்புப் பெற்ற வேட்டுவர் சமுதாயத்தின் பெருமையைச் சொல்லிப் போகிறது. வேட்டுவர்கள் வணங்கும் அப்பச்சிமாரய்யனின் ஆட்சித்திறம், பக்தி, கொடை, வீரம், தெய்விகத்தன்மை ஆகியவற்றை விளக்குகிறது. கொங்கு வேளாளர் சமுகத்தினரும் அப்பச்சிமாரய்யனை வணங்குகின்றனர். இந்தச் சமுகத்தினரான ஆண்டாயி இக்கதையில் இடம் பெறுகிறார். கொங்கு வேட்டுவ சமுதாயக் குலங்கள், அவர்களுக்குக் காணி உரிமையுடைய 24 நாடுகள், 153 வேட்டுவர் சமுதாயக் குலங்கள் பற்றி இந்த நூல் பேசிகிறது. தக்கை இசையில் பாடும்படியாக இந்த நூல் இயற்றப்பட்டது. வேட்டுவர் சமுதாயத்துக்குப் புலிக்கொடி உரிமை உடையதென்று காண்கிறோம்.

பெரிய மாரய்யன் மற்றும் அவருடைய நான்கு சகோதரர்கள் பெற்ற மக்கள் வாழவந்தி நாட்டினரான 70 இளைஞர்கள். ஓடப்பள்ளி வேட்டுவர் ஏழு பேருடைய 70 யுவதிகளை இவர்கள் மணக்கிறார்கள். திருமண விருந்தின் போதே அனைவரும் போருக்குப் போக நேரிடுகிறது. போரில் அனைவரும் அவர்தம் பகைவரும் மாய்ந்து போக 70 மணப் பெண்கள் தீப்பாய்ந்து வீர மரணம் அடைகிறார்கள். இப்படியான துன்பியல் வரலாறாக அமைந்தது இந்தப் போரிலக்கியம். மரபுக் கவிதைகளில் சந்த ஓசையிலும் விருத்த ஓசையிலும் மிகச் சிறந்த நூலாக அமைந்துள்ளது. எழுதியவர் இன்னாரென்று தெரியவில்லை. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வெட்டு தொல்லியல் துறை முன்னாள் தலைவர் புலவர் செ.இராசு பதிப்பித்திருக்கிறார்.