
வாழ்வின் முதல் காதலா! நீதானா...
“வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு...
நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம்,
செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம்,
“ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு...
ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட.
நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள்.
செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான்.
ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா...
அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ,
“என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க,
“என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க,
“இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
Praise
