
நேசம் மறவாத நெஞ்சமடி
"அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.
மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது.
"அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது.
அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு.
மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான்.
வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.
மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை.
ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்...
“ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க...
என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
Praise
