Ambikapathikkovai

Ambikapathikkovai


Unabridged

Sale price $2.00 Regular price$4.00
Save 50.0%
Quantity:
window.theme = window.theme || {}; window.theme.preorder_products_on_page = window.theme.preorder_products_on_page || [];

தமிழில் பல கோவை, உலா, அந்தாதி, தூது முதலிய நூல்கள் இருக்கின்றன. கம்பரின் மகன் அம்பிகாபதியின் கோவை நூல் வியக்கத்தக்க ஒரு படைப்பாகும்.

1930ல் வெளியான சி.ராகவ முதலியார் பதிப்பில் ஒரு நூறு பாடல்களுக்குக் குறைவாகவே இருக்கின்றன.

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரின் 1952-ம் ஆண்டுப் பதிப்பு 564 பாடல்களையும் கொண்டிருப்பதாக அறிகிறேன். விரைவில் முழு நூலை அளிக்கவுள்ளேன்.

மேலும் இயற்கவி சுந்தரசண்முகனார், புதுச்சேரி, 1982ம் ஆண்டு அம்பிகாபதி காதல் காப்பியம் என்று ஒரு நூல் எழுதியிருக்கிறார். அந்நூலையும் விரைவில் ஓர் ஒலிநூலாகத் தரவுள்ளேன்.

அம்பிகாபதி பல பாடல்களைப் பாடியிருக்கிறார் என்றும் சமய சிந்தையோடு பாடிய பாடல்கள் வசந்த மண்டபத்தில் பாடியது என்பர்.

அம்பிகாபதியின் பாடல்கள் சிதைந்து போய்விட்டன. எனினும் சில பாடல்களை "ஒருவாறு ஆராய்ந்தெடுத்து ஒருங்கு சேர்த்து திரட்டி வெளியிடலாயினேம்" என்று சி.ராகவ முதலியார் குறிப்பிடுகிறார். அம்பிகாபதிக் கோவை கம்பராமாயணம், வில்லிபுத்தூர் ஆழ்வார் பாரதம் என்று பெயர் பெறும் நூல்களைப் போல ஆக்கியோர் பெயரால் தலைப்புப் பெறுகிறது.

பல விடயங்களை விளக்குகிறது என்பதால் "பலதுறைக் காரிகை" என்று சிறப்பாகக் கூறப்படுகிறது. கேட்போரைப் பொறுத்து இந்தப் பாடல்களின் கருத்து சிற்றின்பம் என்றும் பேரின்பம் என்றும் ஆராய்ந்து பொருள் கொள்ளலாம்.