வம்ச விருத்தி - Vamsa Vruthi

வம்ச விருத்தி - Vamsa Vruthi


Unabridged

Sale price $3.50 Regular price$6.99
Save 50.0%
Quantity:
window.theme = window.theme || {}; window.theme.preorder_products_on_page = window.theme.preorder_products_on_page || [];

1. துரி 

2. ஒரு சாதம் 

3. கிரகணம் 

4. விழுக்காடு 

5. பீஃனிக்ஸ் பறவை 

6. முழுவிலக்கு 

7. முடிச்சு 

8. ஞானம் 

9. சிலம்பு செல்லப்பா 

10. வம்ச விருத்தி 

11. பருத்திப் பூ 

மாலன் அவர்கள் முன்னுரையில் இருந்து ஒரு சில துளிகள் 

  • வார்த்தைகளை அளந்தெடுத்துக் கச்சிதமாகப் பயன்படுத்தினாலும் முத்துலிங்கம் வார்த்தைகளை மட்டுமே நம்புவதில்லை. சின்னச்சின்ன காட்சிகளைக் கூர்மையாகத் தீட்டிக் கதை நடுவில் செருகிவிடுகிறார். விழுக்காட்டில், இலையான் புழு எடுக்கும் காட்சி, துரியில் காருக்குள் துரியோதனன் தவிக்கும் காட்சி, வம்சவிருத்தியில், மிர்ஸாவை இப்ராஹ’ம் சுட்டுக் கொல்லும் காட்சி எல்லாவற்றிலும் தனியொரு சிறுகதை மட்டுமல்ல, கொஞ்சம் டிராமாவும் இருக்கிறது.
  • இலங்கை எழுத்துக்களின் வாசனையை நான் கொஞ்சம் லேசாக அறிவேன் என்ற போதிலும், நூலாசிரியரின் படிப்பிற்கும், இலக்கிய ரசனைக்கும் மனித நேசத்திற்கும் கூட இந்தப் புத்தகம் சாட்சியளிக்கிறது. ஒரு பிரமிப்போடு இந்தப் புத்தகத்தைப் படித்தேன். நீங்களும் அப்படித்தான் படிக்கப் போகிறீர்கள்.

ஆசிரியர் உரையிலிருந்து ஒரு சில துளிகள் 

  • ஒரு 'கதைசொல்லி' தான் சொல்லவந்த கதையை வாசகனுக்கு நேரடியாகப் போய்ச் சேர வேண்டிய முறையில் சொல்ல வேண்டும். சொல்ல வந்த விஷயத்தைப் பொறுத்து வடிவம் சில வேளைகளில் சிறிது மாறுபடலாம். கதைப்பொருள்தான் முக்கியம். ஆனால் கதையினுடைய 'தொணி' மாத்திரம் மாறாமல் கதையை ஊடுருவி நிற்கவேண்டும். இப்படித்தான் நான் அர்த்தம் பண்ணிக் கொண்டிருக்கிறேன்.

பதிப்பரை

  • 'வம்ச விருத்தி'யில் உள்ள கதைகள் பல, தமிழுக்குப் புதித