
Yaathrigan - யாத்ரீகன்
புனைவுக் கதைகள் மட்டுமே எழுத முடியும் என்று நம்பிக் கொண்டிருந்த என்னை, யாத்ரீகன் போன்றதொரு மனிதத்தின் கதையையும் எழுத வைத்ததற்கு இயக்குனர் 'ழகரம்' க்ரிஷ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் - ஆசிரியர் - கவா கம்ஸ்
யாத்ரீகன் - "அன்பிற்குண்டோ அடைக்குந்தாழ்"
ஒவ்வொருவரும் கடிப்பாகப் பயணம் செய்யக்கூடிய வாழ்க்கை வண்டி இது. கதையாசிரியர் நம் பயணத்தை தனக்கே உரிய தனித்துவத்தில் மிக அழகாக வடிவமைத்துள்ளார்.
மிக சுவாரசியமான நிறுத்தங்களுடன், எதிர்பாராத வளைவுகளோஎடும், வித்தியாசமான பயணிகளுடனும் நாம் பயணம் செய்தாலும், "அன்பு" என்ற பயணச்சீட்டு அனைவரையும் ஒரே பாதையில் எடுத்துச்செல்வது மிக அருமை. சின்ன சின்ன சந்தோஷங்களையும் நாம் மறந்த மனித உணர்வுகளையும் நினைவுபடுத்தியதற்கு மனமார்ந்த நன்றிகள்
இந்த பயணத்தை மேற்கொள்ளும் ஒவ்வொரு "யாத்ரீகனும்" உணர வைக்கும் கதாசிரியரும் கைத் தட்டல்கள் நிச்சயம் .
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு
என்ற திருக்குறளின் உருவமாய் ஒவ்வொரு கதா பாத்திரமும் வலம் வந்திருப்பது கதா சிரியருக்கு அன்பின் மேல் இருக்கும் அளப்பெரிய நம்பிக்கையைத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது
அன்பைக் காதலிக்கும் ஒவ்வொருவரும் இந்த பயணத்தை மேற்கொள்ளுங்கள் . அதுவே கதாசிரியரை இன்னும் நிறைய அறம் போற்றும் மகிழ்ச்சி தரும் பாதிப்புக்களை உருவாக்க ஊக்கப்படுத்தும்.
பயணங்கள் தொடரட்டும்
புதுவுலகம் பிறக்கட்டும்
இன்னும் பல வெற்றிப்படைப்புக்கள் சமுதாயத்திற்குத் தந்திட என் இதய பூர்வமான வாழ்த்துக்கள்
- இளந்த
Praise
