
குறிஞ்சித் தேன் - Kurinji Then
குறிஞ்சித் தேன்
வாசக நெஞ்சத்தில் மறக்கமுடியாத இடத்தைப் பிடித்தவர் பாரு.
நீலகிரி வாழ் மக்களின் (படகர் வாழ்க்கையை) வாழ்வை முறையாகக் கண்டு ஆராய்ந்த பின்னரே எழுதினேன் என்று கூறியுள்ளார் ஆசிரியர் ராஜம் கிருஷ்ணன். மலை மக்கள் வாழ்வை நுணுக்கமாகச் சிந்தனை செய்து கருத்துக்களைப் புலப்படுத்தினேன்.
"நான் இந்நவீனத்தை எழுதத் துணிந்த நாட்களில் மனித வாழ்வின் நிலையாய ஈரங்களினின்று அகன்று செல்ல வழிவகுக்கும் வாழ்வின் வேறுபாட்டைக் குறியாகத்தான் புலப்படுத்த எண்ணினேன். இன்று அந்தக் கருத்து வருந்தத்தக்க வகையில் அச்சமூட்டும் உண்மையாகப் பரவியிருக்கிறது. எனினும் மனித மனத்தின் இயல்பான ஊற்றுக் கண்கள் அன்பின் அடிநிலையைக் கொண்டதென்று நம்பிக்கை கொள்வோம். நல்ல நல்ல செயல்கள் பயனளிக்க ஒரு தலைமுறைக் காலம் பொறுத்திருக்கலாம் என்பது ஆன்றோர் வாக்கு." என்றும் கூறியுள்ளார் .
Praise
