
Thamizhiyakkam
பாரதிதாசன் என்னும் கனக சுப்புரத்தினம் மதுரைக்கு வரும்பொழுதெல்லாம் மதுரை நகர்மன்றச் சாலையில் இருந்த பாரதி புத்தக நிலையத்தில் அமர்ந்து தன் நண்பர்களைச் சந்திப்பது வழக்கம். அவர் மதுரைக்கு வந்த ஒருமுறை நகர்வுலாச் சென்றுவிட்டு பாரதி புத்தகநிலையத்திற்கு வந்தார். அக்கடையின் உரிமையாளர் சாமிநாதனிடம் தாளும் கோலும் வாங்கி, தமிழ் வளர்த்த மதுரைத் தெருக்களிலேயே தமிழ் இல்லையே எனச் சினந்து, தமிழியக்கம் என்னும் 120 அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களால் அமைந்த இந்நூலை இயற்றினார். இந்நூலின் முதற்பதிப்பு புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தில் அமைந்திருந்த செந்தமிழ் நிலையத்தாரால் வெளியிடப்பட்டது.
வெறுப்புண்டோ ? அரசியல்சீர்
வாய்க்கப் பெற்றோர்
ஆணிகர்த்த பேடிகளோ?
அரும்புலவர் ஊமைகளோ?
இல்ல றத்தைப்
பேணுமற்ற யாவருமே
உணர்வற்றுப் போனாரோ?
பெருவாழ் வுக்கோர்
ஏணிபெற்றும் ஏறாத
தமிழர்உயிர் வாழ்வதிலும்
இறத்தல் நன்றே. 6
Praise
