Isai Amuthu

Isai Amuthu


Unabridged

Sale price $2.00 Regular price$4.00
Save 50.0%
Quantity:
window.theme = window.theme || {}; window.theme.preorder_products_on_page = window.theme.preorder_products_on_page || [];

பாவேந்தர் பாரதிதாசன் நூலான‌ இசை அமுது 52 பாடல்களை மூன்று பகுதிகளாகத் தருகிறது. முதல் பகுதியான காதல் பகுதியில் 31 பாடல்களும் இரண்டாவது பகுதியான தமிழ்ப் பகுதியில் 13 பாடல்களும் மூன்றாவது பகுதியான பெண்கள் பகுதியில் 8 பாடல்களுமாக 52 பாடல்கள் உள்ளன. இவை யாவும் இசையோடு பாடப்படுவத்ற்காக எழுதப்பட்டவை.

பரந்த அளவில் அறியப்பட்ட இந்தப் பாடல் மூன்றாவது பகுதியில் உள்ளது. 1951ஆம் ஆண்டு AVM தயாரிப்பில் வெளியான 'ஓர் இரவு' படத்தில் இடம் பெற்ற V.J.வர்மா, M.S.ராஜேஸ்வரி பாடிய பாடல். இசையமைப்பு R. சுதர்சனம்.

துன்பம்நேர்கையில்யாழ்எடுத்துநீ

இன்பம்சேர்க்கமாட்டாயா? -- எமக்

கின்பம்சேர்க்கமாட்டாயா? -- நல்

லன்பிலாநெஞ்சில்தமிழில்பாடிநீ

அல்லல்நீக்கமாட்டாயா? -- கண்ணே

அல்லல்நீக்கமாட்டாயா?துன்பம்...

வன்பும்எளிமையும்சூழும்நாட்டிலே

வாழ்வில்உணர்வுசேர்க்க -- எம்

வாழ்வில்உணர்வுசேர்க்க -- நீ

அன்றைநற்றமிழ்க்கூத்தின்முறையினால்

ஆடிக்காட்டமாட்டாயா? -- கண்ணே

ஆடிக்காட்டமாட்டாயா?துன்பம்...

அறமிதென்றும்யாம்மறமிதென்றுமே

அறிகிலாதபோது -- யாம்

அறிகிலாதபோது -- தமிழ்

இறைவனாரின்திருக்குறளிலேஒருசொல்

இயம்பிக்காட்டமாட்டாயா? -- நீ

இயம்பிக்காட்டமாட்டாயா?துன்பம்...

புறம்இதென்றும்நல்லகம்இதென்றுமே

புலவர்கண்டநூலின் -- தமிழ்ப்

புலவர்கண்டநூலின் -- நல்

திறமைகாட்டிஉனைஈன்றஎம்உயிர்ச்

செல்வம்ஆகமாட்டாயா? -- தமிழ்ச்

செல்வம்ஆகமாட்டாயா?துன்பம்...

இந்நூலின் 52 பாடல்களும் ஒன்றுக்கொன்று இசை இனிமையில் போட்டி போடுகின்றன என்றால் மிகையாகாது.