
Kathal Ninaivukal
தாய்மொழியின் வலிமையை தனது சிந்தனையாக வடிவமைத்து, பார்ப்பனர் அல்லாதார் பண்பாட்டைப் போற்றுகிற பாடல்களை தமிழில் கொடுத்தவர் பரதிதாசன். 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க இலக்கியத்திலிருந்து தன் மொழி ஆற்றலை எடுத்து நவீன உலகில் கொடுத்தவர். புரட்சிக் கவியான பாரதிதாசன் எழுதிய காதல் கவிதைகளும் சிறப்பு வாய்ந்தவை. “எல்லோரும் பாட்டுக்கு உரை எழுதியபோது பெரியாரின் உரைக்கு எல்லாம் பாட்டெழுதியவன் பாரதிதாசன்” என்று புகழப்பட்ட பாரதிதாசன் தனது காதல் கவிதைகளிலும் சாதி எதிர்ப்பு மறுமணம் குறித்தெல்லாம் சேர்த்துப் பாடியவர். சங்க இலக்கியங்களில் காதலன் பொருள் தேடி பிரிந்து செல்லும்போது பாடப்படும் பாடல்களைப் போல, பொருள் சேர்க்க காதலன் சென்றதால் பிரிந்திருக்கும் காதலர்கள் எழுதிக் கொள்ளும் கடிதங்களில் தங்கள் வருத்தங்களை, அன்பை, காதல் ஏக்கத்தைப் பாடும் கவிதையாக வடிக்கப்பட்ட ஒரு காதல் கடிதம். மாந்தோப்பு எனும் கவிதையில் அமுதவல்லிக்கும் குப்பனுக்குமான காதலை பாடியிருப்பார். ஒரு பெண்ணை விரும்பி அவளிடம் தன் காதலை சொல்லும்போது, நான் சிறுவயதில் விதவையானவள் என்று அவள் கூறுகிறாள். குப்பன் தன் காதலில் உறுதியாக இருக்கிறான். பிற்போக்கு எண்ணம் கொண்ட ஊர்காரர்கள், சாதிகாரர்கள் போன்றோர் ஊர் விலக்கம் செய்வோம் என்று பல எதிர்ப்புகளை தெரிவிக்கிறார்கள். சாதியவாதிகளை எல்லாம் மீறி அப்பெண்ணை மணக்கும் அந்த கவிதையில் மறுமணத்தை வலியுறுத்தி பாரதிதாசன் எழுதிய வரிகள் சிறப்பு வாய்ந்தவை. தமிழில் உழைப்பாளிகளின் காதலைப் பாடியவர் பாரதிதாசன். வண்டிக்காரர், மாடு மேய்ப்பவர், பாவோடு பெண்கள், தறித் தொழிலாளி நினைவு, உழவர் பாட்டு, உழத்தி, ஆலைத் தொழிலாளி, இரும்பாலைத் தொழிலாளி, கோடாலிக்(கோடரி)காரர், கூ
Praise
