Ribu Geethai

Ribu Geethai


Abridged

Sale price $2.00 Regular price$4.00
Save 50.0%
Quantity:
window.theme = window.theme || {}; window.theme.preorder_products_on_page = window.theme.preorder_products_on_page || [];

ரிபு கீதை அத்வைத கருத்துக்களை கொண்ட பாடல் தொகுப்பாகும். சிவரகசியத்தில் ஆறாவது பகுதியாக ரிபு கீதை அறியப்படுகிறது. இதன் தமிழ் வடிவம் ஒரு நூலாக ரமணாச்சிரமத்தினரால் வெளியிடப்பட்டது. இருபதாம் நூற்றாண்டில் நம்மிடையே வாழ்ந்த ஜீவன் முத்தரான திருவண்ணாமலை இரமண மகரிஷி அவர்கள் ரிபுகீதையை பாராயணம் பண்ணுமாறு பலருக்குச் சொன்னதோடு தாமே சில பாடல்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்து அவற்றை பாராயணம் பண்ண ஊக்குவித்திருக்கின்றார். ரிபு கீதை என்ற இந்த நூல் கைலாயத்தில் பரமசிவனால் ரிபு முனிவருக்கும் பின்னர் ரிபு முனிவரால் கேதார்நாத்தில் நிதாகர் முதலியோருக்கும் உபதேசிக்கப்பட்டது. இந்த நூல் தஞ்சை மாவட்டத்தினை சார்ந்த கோவிலூர் மடத்தினைச் சார்ந்த அருணாசல சுவாமி என்னும் துறவுசுவாமியால் வெளிவந்தது. ஐம்பது அத்தியாயங்களில் 2493 ஸ்லோகங்களைக் கொண்ட வடமொழி மூலத்தை, உலகநாத ஸ்வாமிகள் என்னும் துறவுநாமம் பூண்ட திருவிடைமருதூர் பிரம்மஸ்ரீ பிக்ஷு சாஸ்திரிகள் தமிழில் 44 அத்தியாயங்களில் 1924 விருத்தப்பாக்களாக ஆக்கியுள்ளார். ரமணியின் இந்த ஒலி நூலில் ரமணர் தெரிந்தெடுத்த 139 பாடல்கள் அமைந்துள்ளன.