சுரதா (Suratha; 23 நவம்பர் 1921 – 29 சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.
சரோஜாதேவிக்கும் நாணம் வந்ததாம், ஜெயபாரதி தாலியில் சிலுவையாம்; ஒய்யார நடிகை உஷா நந்தினி மழையில் நனைந்தாளாம்; ஜெயலலிதா இருமுறை குளிப்பாளாம்; கண்ணாம்பா நாய் வளர்த்தாளாம்; காஞ்சனாவும் சாதி நாய் வளர்த்தாளாம்; ஜமுனா அணில் வளர்த்தாளாம்; குமாரி உஷா குரங்கு வளர்த்தாளாம்; சச்சு சுண்டெலி வளர்த்தாளாம்; விஜய நிர்மலா முயல் வளர்த்தாளாம்; ஆர்லீன் டார்லின் உதட்டில் மச்சமாம்; பாரதி எனும் நடிகைக்கு மார்பில் மச்சமாம்; கே ஆர் விஜயாவுக்கு மகன் பிறக்க ஆசையாம்; ராஜசிரீக்கு அத்திப் பழம் பிடிக்குமாம்; தேகம் கறுத்துள வாணிசிரீக்கு நாவல் படிப்பது வழக்கமாம். எல்லாம் கவிஞர் சுரதா சொல்கிறார். கேளுங்கள்....
Praise

