சுரதா (Suratha; 23 நவம்பர் 1921 – 29 சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.
வாழ்வியலின் பல்வேறு பொருட்களில் கவிஞர் சுரதா அவர்கள் தீட்டிய கவிதைகளில் இருந்து தொகுத்த கருத்து முத்துக்கள் சுரதா கவிதைகள் என்ற தலைப்பில் இந்த நூலாக அமைந்துள்ளது. இயற்கையில் இருந்து இடுகாடு வரையில் நூற்று ஐம்பதுக்கு மேற்பட்ட பொருட்களில் அவர் வடித்திருக்கும் கவிதைகள் ஒவ்வொன்றுமே மிகமிகச் சிறப்பானவை. இவ்வளவு எளிதாக சிறப்பாக தெளிவாக கவிதைகளில் கருத்துக்களைச் சொன்னவர்கள் மிகவும் அரிது.
Praise

