புகழ்மாலை

புகழ்மாலை


Unabridged

Sale price $1.50 Regular price$3.00
Save 50.0%
Quantity:
window.theme = window.theme || {}; window.theme.preorder_products_on_page = window.theme.preorder_products_on_page || [];

சுரதா (Suratha; 23 நவம்பர் 1921 – 29 சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால்‌ பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.

"புகழ் பெற்ற பலருக்கு கவிமாலையாக நான் தொடுத்த இந்தப் புகழ் மாலையைப் படித்துப் பயன் பெறுங்கள்" என்று சுரதா புகழ் மாலை என்ற இந்த நூலின் "என்னுரை" பகுதியில் குறிப்பிடுகிறார். சீதக்காதி, உமறுப்புலவர், வேத நாயகம்பிள்ளை, உ.வே.சாமி நாதையர், பாஸ்கர சேதுபதி, பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், பாண்டித்துரைத்தேவர், ஞானியார் அடிகள், மறைமலை அடிகள், பாரதியார், திரு.வி,க., பாரதிதாசன், அண்ணாமலை ரெட்டி, வ.உ.சி., நேரு, காமராசர், புத்தர், விவேகானந்தர், பல பாரதிகள், பழையகோட்டை பட்டயக்காரர், இக்பால், லெனின், பன்னீர்செல்வம், மருதப்பர், மயிலை சிவமுத்து, பாம்பன் ஸ்வாமி, சிங்காரவேலர், பாரதிதாசன், அண்ணா ஆகியோர் பற்றி அருமையும் பெருமையுமாக பாடல்கள் அமைந்துள்ளன.