
பக்திப்பாடல்கள்
பாரதியார் பக்திப்பாடல்கள் வினாயகர் நான்மணி மாலை, முருகன் பாட்டு, வேலன் பாட்டு, கிளிவிடுதூது, எமக்கு வேலை, வள்ளிப்பாட்டு, போற்றி, சிவசக்தி, காணி நிலம் வேண்டும், நல்லதோர் வீணை, சக்திக்கூத்து, சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம், பேதை நெஞ்சே, முத்துமாரி, கண்ணனை வேண்டுதல், நந்தலாலா, கோவிந்தன் பாட்டு, யேசு கிறிஸ்து, அல்லா என்ற இன்னோரன்ன பல தலைப்புகளில் 78 பாடல்களைக் கொண்டது. இவற்றில் சில பல்வேறு வகை இசைப்பாடல்களாகப் பலராலும் பாடப்பட்டுள்ளன. இதில் சங்கடம் என்னவென்றால் மொத்தப் பாடல்களில் சிலவற்றையே பலரும் பாடிப் போயிருக்கின்றனர். அந்தச் சிலவும் பார்தியாரின் பக்திக் கோட்பாட்டின் விரிவான பரப்பைக் காட்டுவனவாக அமையவில்லை. ரமணி ஒலி நூலுக்காக அனைத்து 78 பாடல்களும் இந்த நூலில் உள்ளன. கட்டமைக்கப்பட்ட ராக தாள இசைக்குப் புறம்பாக பாவினம் மற்றும் சிற்றிலக்கிய வகைகளில் பரந்த பல வடிவங்களில் பாடவென அமைந்த வடிவில், குறிப்பாக விருத்தம், சிந்து போன்ற பாடல்களுக்கு உரிய ஓசையோடு ரமணி இந்த நூலுக்கு ஒலிவடிவம் கொடுத்திருப்பது தெற்றெனத் தெரியும் சிறப்பாகிறது.
Praise
