மௌனி (இயற்பெயர் - மணி) ஒரு புகழ் ஈட்டிய தமிழ் எழுத்தாளர். இவர் மணிக்கொடி இதழில் எழுதத் துவங்கி, கசடதபற இதழ் வரை கதைகள் எழுதியவர். கணிதத்தில் பட்டம் பெற்றிருந்த அவருக்கு இசையிலும் மெய்யியலிலும் ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. கதாபாத்திரங்களின் அன்றாட உலகை விவரிப்பதை விடவும் அவர்களது மனவுலகின் அரிய தருணங்களை வெளிப்படுத்துவதே இவரது எழுத்து நடையின் சிறப்பு. இவர் 24 கதைகள் மட்டுமே எழுதியுள்ளார். 1907 சூலை 27ஆம் நாள் தஞ்சை மாவட்டம் மாயவரத்திற்கு அருகிலுள்ள கிராமத்தில் பிறந்தார். அவருடைய தந்தையார் செம்மங்குடியில் வாழ்ந்து வந்தார். 1935 வரை கும்பகோணத்தில் படித்தார். கணிதத்தில் பட்டம் பெற்றார். திருமணத்திற்கு பிறகு 14 ஆண்டுகள் கும்பகோணத்தில் வசித்தார். பின்னர் தன் குடும்பச் சொத்து மற்றும் தொழிலைப் பராமரிக்க சிதம்பரம் வந்து இறுதிவரை அங்கேயே வாழ்ந்தார். மெளனிக்கு மொத்தம் ஐந்து குழந்தைகள். நான்கு மகன்களும் ஒரு மகளும். இரண்டு மகன்கள் இளம் வயதிலேயே விபத்தில் சிக்கி அகால மரணமடைந்தனர். ஒருவர் எம்.ஏ. படித்து மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் 2004இல் காலமானார். ஒரு மகன் அமெரிக்காவில் வசிக்கிறார். மகள், மெளனியின் வீட்டில் சிதம்பரத்தில் வாழ்ந்து வருகிறார். மெளனி 1985 சூலை 6ஆம் தேதி காலமானார். மெளனியின் மொத்த படைப்புகள் - 24 சிறுகதைகள், 2 கட்டுரைகள் 1.பிரபஞ்சகானம் ; 2.ஏன்? 3.காதல் சாலை; 4.குடும்பத்தேர்; 5.கொஞ்ச தூரம்; 6.சுந்தரி; 7.அழியாச்சுடர்; 8.மாறுதல்; 9.நினைவுச் சுழல்; 10.மாபெருங் காவியம்; 11.மிஸ்டேக்; 12.சிகிச்சை 13.எங்கிருந்தோ வந்தான் 14.இந்நேரம்,இந்நேரம் 15.மாறாட்டம் 16.நினைவுச் சுவடு 17.மனக்கோலம் 18.சாவில் பிறந்த சிருஷ்டி 19.குடை நிழல் 20.பிரக்ஞை வெளியில் 21.மனக்கோட்டை 22.உறவு,பந்தம்,பாசம் 23.அத்துவான வெளி 24.தவறு &n
Praise

