Sridhar Vembu - Saathanai Vaazkkai

Sridhar Vembu - Saathanai Vaazkkai



Sale price $1.99
Quantity:
window.theme = window.theme || {}; window.theme.preorder_products_on_page = window.theme.preorder_products_on_page || [];

Sridhar Vembu - Saathanai - A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios storeஉலக அளவில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் புகழ்பெற்றவர்கள் என்றவுடன் நம் நினைவுக்கு வருபவர்கள் ஸ்டீவ் ஜாப்ஸ், பில் கேட்ஸ் போன்றவர்கள். இந்த வரிசையில் ஓர் இந்தியர் அதுவும் தமிழர் ஒருவரும் இருக்கிறார். ஆச்சரியமாக உள்ளதா? அவர்தான் ஸ்ரீதர் வேம்பு. காவேரிக் கரையிலிருந்து கலிஃபோர்னியா வரை சென்று கலக்கிவிட்டு இன்று தாமிரபரணிக் கரையில் இருந்து அலுவலக ரீதியாக இயங்கி வருகிறார். தகவல் தொழில்நுட்பத் துறையில் உலக அளவில் புகழ்பெற்ற ஸோஹோ (Zoho Corporation) எனும் நிறுவனத்தை உருவாக்கியவர் இவரே. தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் எளிமையான விவசாயக் குடும்பத்தில் பிறந்து, உலகமே வியக்கும் அளவுக்கு உயர்ந்த ஸ்ரீதர் வேம்புவின் வாழ்க்கைப் பயணம் சாதாரணமானதல்ல. இந்த நிலைக்கு அவர் வந்ததற்குப் பின்னால் உள்ள அவரது உழைப்பும் தியாகமும் பலர் அறியாதது. இந்தப் புத்தகம் அவரது வாழ்க்கையின் ஊடாகச் சென்று அவரது பயணத்தைப் பதிவு செய்கிறது. ஸ்ரீதர் வேம்புவின் கனவு, அதை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட இடர்கள், சந்தித்த சவால்கள், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் உருவான சிக்கல்கள், தகவல் தொழில்நுட்பத் துறையில் அவர் ஏற்படுத்திய மாற்றங்கள், தமிழ்நாட்டின் கிராமங்களில் அவர் உருவாக்கிய தொழில்நுட்பப் புரட்சி, இந்தியாவின் குறிப்பிடத்தக்கப் பணக்காரர்களில் ஒருவராக இருந்தும் இன்று ஒரு கிராமத்தில் எளிமையான வாழ்க்கை வாழ்வதின் பின்னணி என ஸ்ரீதர் வேம்புவின் வாழ்வில் நடந்த பல முக்கிய நிகழ்வுகளை இந்தப் புத்தகம் பதிவு செய்கிறது. ஸ்ரீதர் வேம்பு வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவும், தொழில்நுட்பத் துறையில் சாதிக்க வேண்டுவோர்க்கு வழிகாட்டியாகவும், எதிர்காலச் சந்ததியினருக்குப் பாடமாகவும் அமையும். எழுத்தாளர் ஹரன் G.S.Sivakumar எழுதி , Sri Srinivasa வாசிப்பில் Swasam பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம் Audiobook by Aurality.